×

இன்று கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று 8ம் தேதி நடக்க உள்ளது என மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் அவசர செயற்குழு கூட்டம் இன்று 8ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் கவரைப்பேட்டை, லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன் தலைமை தாங்குகிறார். ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் வரவேற்புரை ஆற்றுகிறார்.

மாவட்ட நிர்வாகிகள் ஜெ.மூர்த்தி, மு.கதிரவன், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, எம்.எல்.ரவி, எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் இஏபி.சிவாஜி, சி.எச்.சேகர், கே.ஜி.பாஸ்கர்சுந்தரம், வெ.அன்புவாணன், ஜி.ஸ்டாலின், ஏ.ஆர்.டி.உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, பா.செ.குணசேகரன், பி.வெங்கடாசலபதி,

கே.சுப்பிரமணி, பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். எனவே ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

The post இன்று கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.

Tags : East district DMK emergency working committee meeting ,DJ Govindarajan ,MLA ,Thiruvallur ,Thiruvallur East district ,DMK ,working committee ,8th district ,East District ,Emergency Executive ,Committee ,Dinakaran ,
× RELATED புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தங்கும் மது பிரியர்கள்