- ஸ்டாக்ஹோம்
- அமெரிக்கா
- விக்டர் அம்ப்ரோஸ்
- மாசசூசெட்ஸ் மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகம்
- ஐக்கிய மாநிலங்கள்
- கேரி ருவ்குன்
- ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி…
ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவை சேர்ந்த 2 மருத்துவ பேராசிரியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் விக்டர் அம்ப்ரோஸ். அதே போல் ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் கேரி ருவ்குன். இவர்கள் இருவரும் இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என நோபல் கமிட்டி நேற்று அறிவித்துள்ளது. மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக அம்ப்ரோசுக்கும், ருவ்கினுக்கும் இப்பரிசு வழங்கப்படுகிறது.
பரிசு வென்றவர்களுக்கு தங்க பதக்கத்துடன் 10 லட்சம் டாலர் (ரூ.8.39 கோடி)பரிசு தொகை வழங்கப்படுகிறது. கடந்த 1901 ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ம் தேதி இந்த பரிசு வழங்கப்படும். இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்றும்,வேதியலுக்கான நோபல் நாளையும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருது நாளை மறுநாளும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு 11ம் தேதி அறிவிக்கப்படும்.
The post மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக 2 அமெரிக்க மருத்துவ பேராசிரியர்களுக்கு நோபல் பரிசு appeared first on Dinakaran.