சென்னை: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு கூறியதாவது; சட்டவிரோத போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 15 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை செயல்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு முகமையான என்சிபி கஞ்சா, போதைப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை பற்றி தகவல்களை பரிமாறி வருகிறது. சென்னை முதல் குமரி வரை கடற்கரை பகுதிகளில் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க 42 கடல்சார் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள், சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிக சக்தி வாய்ந்த 24 படகுகள் தரப்பட்டுள்ளன. தமிழ்நாடு போலீஸ் மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் கஞ்சா பயிரிடப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசு..!! appeared first on Dinakaran.