×

சென்னையில் முகாமிட்ட மலேசிய மோசடி கும்பல்: வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் முகாமிட்ட மலேசிய மோசடி கும்பல் மீது வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட சென்னையில் தொழில்நுட்ப அலுவலகம் அமைத்திருந்தனர். சிம் பாக்ஸ், தொழில்நுட்ப கருவிகளை சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து செயல்படுத்த திட்டமிட்டனர்.

மோசடியில் தொடர்புடைய மலேசிய கும்பலைச் சேர்ந்த 8 பேர் கடந்த ஜூன் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் இருந்து சிம் கார்டுகள், தொழில்நுட்ப கருவிகளை வெளிநாட்டுக்கு கடத்தியது தெரிய வந்தது. கடந்த ஜூன் மாதம் பிடிபட்ட மலேசிய மோசடி கும்பல் மீது வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post சென்னையில் முகாமிட்ட மலேசிய மோசடி கும்பல்: வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,CBCID ,India ,Dinakaran ,
× RELATED வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!