×

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு

கோபேஸ்வர்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் சவுகாம்பா சிகரம்-3 உள்ளது. இந்த சிகரத்திற்கு செல்லும் வழியில் அமெரிக்காவை சேர்ந்த தெரசா டோவரக், இங்கிலாந்தின் பே ஜேன் மேனர் ஆகிய மலையேற்ற வீராங்கனைகள் 6,015 மீட்டர் உயரத்தில் ஏறிய போது அவர்கள் வைத்திருந்த உணவு மற்றும் மலை ஏற்றத்திற்கு பயன்படும் உபகரணங்கள் பள்ளத்தாக்கில் விழுந்தன.

இதனால் 3 நாட்களாக மலையில் சிக்கி தவித்தனர். இதையடுத்து இந்திய விமான படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நேற்று இருவரும் விமான படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் என மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Kobeswar ,Chaukamba Peak-3 ,Chamoli district ,Teresa Dovarak ,America ,Bey Jane Manor ,England ,
× RELATED உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு