- தாதாத் ஜமாஅத்
- திமுக
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரசுப் பொருளாளர்
- ஏ.இப்ராஹிம்
- மாநில துணைப் பொதுச் செயலாளர்
- A. அப்துர் ரஹீம்
- பிரதி பொது செயலாளர்
- ஏ ரஸா
- பாராளுமன்ற கூட்டுக்குழு
- வக்பு
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொருளாளர் ஏ.இப்ராஹிம், மாநில துணைப்பொதுச் செயலாளர் ஏ.அப்துர் ரஹீம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், திமுக துணைப்பொதுச்செயலாளரும் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினருமான ஆ.ராசாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது வக்பு வாரிய திருத்த மசோதாவில் உள்ள பாதகமான விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு30 உடன் இந்த சட்டத்திருத்தம் நேரடியாக மோதுவது குறித்தும், வக்பு சொத்து ஆக்கிரமிப்பாளர்களை நிலத்தின் உரிமையாளர்களாக மாற்றுவதற்கான சதி இந்த சட்டத்திருத்தத்தின் வாயிலாக செய்யப்படுகிறது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டன. இந்த சந்திப்பின் போது, வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் தங்கள் எதிர்ப்பை முன்னெப்போதையும் விட கூடுதலாக வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கை மனுவையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அளித்தனர். இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் ஐ.அன்சாரி, ஏ.பெரோஸ் கான் ஆகியோர் உடனிருந்தனர்.
The post தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.