- முன்னாள்
- ஆதிராவிடர்
- பழங்குடியினர் நல ஆணையம்
- எஸ்.சி.
- எஸ்டி பணியாளர் சங்கம்
- சென்னை
- தமிழ்நாடு தொழில்நுட்ப மற்றும் கல்வித் தி
- டாக்டர்
- அம்பேத்கர்
- மாநில செயலாளர்
- எஸ்டி ஊழியர் நலம்
- டி. மகிமைதாஸ்
- ஜனாதிபதி
- நிலை
- டி.
- மணிமொழி
- தமிழ்நாட்டின் முதலாம் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தமிழ்
- வனன்
- ஆதிதிரவிதர்
- பழங்குடி நல ஆணையம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி,எஸ்டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டாக்டர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் டி.மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் ஆணையத்திற்கு தலைவர், துணை தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களை நியமித்து ஆணை வெளியிட்டார். ஆனாலும், ஆணையத்திற்கு அலுவலகம் அமைக்கப்படாமலும், நீதி ஒதுக்கப்படாமலும் இருந்தது. இதற்காக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.
கோரிக்கையை ஏற்று, ஆணையத்திற்கு அலுவலகமும், அண்ணாசாலையம் தனி அலுவலகம் ஒதுக்கி, 27 லட்சம் செலவில் புனரைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணைவிட்டு, மேலும் நிதியாக ரு.2.30 கோடியும், அலுவலர் மற்றும் பணியாளர்கள் 48 பேர் நியமிக்கப்படவும், அவர்களின் ஊதியத்திற்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு என 4.10 கோடி ஒதுக்கப்பட்டது. இவ்வாணையத்தின் முந்தைய தலைவரும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சிவகுமார் கடந்த மே மாதம் 11ம் தேதி ஓய்வுபெற்றார். இந்நிலையில், தற்போது இவ்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், ஆணையத்தின் புதிய தலைவரை வாழ்த்தி, வரவேற்கிறோம்.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.