×

திருத்தணியில் செல்ல நாயை மீட்டுத்தந்த தீயணைப்பு வீரர்கள்: மூதாட்டி மகிழ்ச்சி

திருத்தணி: திருத்தணியில் செல்ல நாயை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். திருத்தணி மேட்டுத் தெருவில் வசிப்பவர் விசாலாட்சி (71). இவர். கடந்த 5 வருடமாக மிகவும் பாசத்தோடு நாயை வளர்த்து வந்தார். நாய் மொட்டை மாடி சிலாப்பில் குதித்துள்ளது. பின்னர் அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தது. வீட்டில் நாயை காணவில்லை என்று பதறிய மூதாட்டி பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக பசி பட்டினியோடு இருந்த நாய் குரைக்கும் சத்தம்கேட்டு மேலே போய் பார்த்த போது நாய்  குரைத்து கொண்டிருப்பதும் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருப்பது தெரியவந்தது.தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு அலுவலர் அரசு தலைமையிலான 3 தீயணைப்பு வீரர்கள்,  விரைந்து வந்து கயிறு கட்டி அந்த நாயை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நாய் பாசத்தோடு ஓடிவந்து தன் எஜமானியின் கால்களை வருடி உற்சாகமாக விளையாடியதை அனைவரும் கண்டு வியந்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு மூதாட்டி விசாலாட்சி நன்றி தெரிவித்தார்….

The post திருத்தணியில் செல்ல நாயை மீட்டுத்தந்த தீயணைப்பு வீரர்கள்: மூதாட்டி மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Vizalatsi ,Tiruthani Madu Street ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...