×

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்

டெல்லி: இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டு டிசம்பரில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும். ஒவ்வொரு ரயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். மேலும் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க ரூ.70 கோடி செலவிடப்படும். வடக்கு ரயில்வேயின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹரியானாவின் ஜிந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள 1 மெகாவாட் பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் எலக்ட்ரோலைசர் ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். இந்த எரிபொருள் நிரப்பும் மையத்தில் 3,000 கிலோ ஹைட்ரஜனை சேமித்து வைக்க முடியும். இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Germany ,France ,Sweden ,China ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து காங்கிரசை நீக்குக