தஞ்சாவூர் அக் 5: மாநகராட்சிக்கு அக்டோபர் 31க்குள் சொத்து வரியை செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை வரும் அக்டோபர் 31க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும். பொதுமக்கள் ரொக்கமாக மாநகராட்சி அலுவலக வரி வசூல் மையங்களில் செலுத்தலாம். அதேபோல் ஆன்லைன் மூலம் http://tnurbanpay.tn.gov.in/PT_CPPAYMENTDetails.aspx என்ற இணையதளம் மூலம் நெட் பேங்கிங், டெபிட், கிரெடிட் கார்ட், யுபிஐ மூலம் செலுத்தலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.
The post அக்.31க்குள் சொத்து வரிசெலுத்தினால் 5% ஊக்கத்தொகை: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.