- வேப்பந்தட்டை அரசு கல்லூரி
- பெரம்பலூர்
- வேப்பந்தட்டை
- அரசு
- கல்லூரி
- தேசிய தன்னார்வ இரத்த தான தினம்
- அரசு கல்லூரி
- கலை மற்றும் அறிவியல்
- நன்கொடை
- தின மலர்
பெரம்பலூர், அக்.5: வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த தானம் வழங்கியோருக் கான பாராட்டுவிழா நடை பெற்றது. பெரம்பலூர் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய தன்னார்வ குருதிக் கொடை தினத்தை முன்னிட்டு பலமுறை குருதி கொடுத்தோருக்கும், அதிகமாக குருதிகொடுத்த கல்லூரியைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கும், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தோருக்கும் துணை நின்ற வட்டார மருத்துவர்க ளுக்கும் பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்தப் பாராட்டு விழாவிற்கு வேப் பந்தட்டை அரசுக்கல்லூரி யின் முதல்வர் (பொ) முதல்வர் சேகர் தலைமை வகித்து, ரத்த தானம் செய்தோருக்குப் பாராடடுகளைத் தெரிவித்தார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணைஇயக்குநர் டாக்டர் மாரிமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப்குமார் கலந் துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ரத்ததான முகாம் நடை பெற்றது. இதில் பெரம்ப லூர் மாவட்ட இரத்த வங்கி அலுவலர் டாக்டர் சத்யா தலைமையிலான குழுவி னர் முகாமிற்கான ஏற்பா டுகளைச் செய்திருந்தனர். முகாமில் முதல்வர், பேராசி ரியர்கள்,அலுவலகப்பணியாளர்கள், மாணவ மாண விகள் 74பேர் ரத்தம் வழங்கினர்.
ரத்ததானம் செய்தோரை முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர். விழாவில் அதிகமுறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மாரிமுத்து, பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப்குமார் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.