- நென்மேனி சாலை
- சத்தூர்
- சதுர் நென்மேனி சாலை
- இட்டான்குடி
- Kattalampatti
- வளவந்தாள்புரம்
- நென்மேனி
- இராமலிங்கபுரம்
சாத்தூர், அக்.5:சாத்தூர் நென்மேனி சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. அதை கடந்து தான் சாத்தூர் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள இருக்கன்குடி, கத்தாளம்பட்டி, வாளவந்தால்புரம், நென்மேனி, ராமலிங்காபுரம் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கிராசிங் ரயிலின் வருகைக்காக அடிக்கடி பூட்டப்படுவதால் கேட்டின் இருபுறமும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையுள்ளது. ரயில் சென்ற பின் கேட் திறக்கும் போது ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றோடு ஒன்று முந்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. வாகனங்கள் செல்ல அதிக நேரம் ஏற்படுகிறது.
மேலும் ரயிலின் வருகைக்காக கேட் பூட்டியிருக்கும் போது மாற்று வழி இல்லாததால் மருத்துவ அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்க முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.11 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் சாலைகள் அளவீடு செய்யும் பணிகள் நிறைவடைந்தும் இதுவரை பணிகள் தொடங்காமல் உள்ளது. இதனால் ரயில்வே பீடர் சாலை தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது.
The post நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.