×
Saravana Stores

வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு உற்சவம்

காரிமங்கலம், அக்.5: காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி செய்திருந்தனர்.

The post வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Navratri Kolu Utsavam ,Varahi Amman Temple ,Karimangalam ,Navratri ,Ashta Varahi Amman Temple ,Alli Thanappa Counter Matriculation School ,
× RELATED போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி திடீர் ஆய்வு