- நவராத்தி திருவிழா
- சாரதா நிகேதன் கல்லூரி
- காரைக்குடி
- சாரதா தேவியார் கோவில்
- சாரதா நிகேதன் மகளிர் கலைக் கல்லூரி
- அமராவதிபுதூர்
- கல்லூரி அதிபர்
- சிவசங்கரிரம்யா
- யதீஸ்வரி சரதேஸ்வரி ப்ரியா
- நவராத்திரி
- சாரதா நிகேதன் கல்லூரி
- தின மலர்
காரைக்குடி, அக். 5: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கலைக்கல்லூரியில் உள்ள சாரதா தேவியார் கோயிலில் நவராத்திரி விழா துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சிவசங்கரிரம்யா வரவேற்றார். கல்லூரி செயலாளர்கள் யத்தீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, யத்தீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா ஆகியோர் தலைமை வகித்தனர். தேவகோட்டை நிரோஷா சுந்தரலிங்கம், மீனாட்சி பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் சிலம்புசெல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொழிலதிபர் லண்டன் முருகேசன் துவக்கி வைத்து பேசுகையில், பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடு முன்னேறும். இக் கல்லூரியில் நமது பண்பாடு காக்கப்படுவது பாராட்டக்கூடியது. பெண்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடு பட வேண்டும். ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும். படித்து முடித்தவுடன் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். படித்து விட்டு வீட்டில் முடங்கிகிடக்காமல் வேலைக்கு செல்ல வேண்டும். பெண்கள் தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும். அரசியலில் பெண்கள் ஈடுபாடு காட்ட வேண்டும், என்றார். கல்லூரி இயக்குநர் மீனலோச்சனி நன்றி கூறினார்.
The post சாரதா நிகேதன் கல்லூரியில் நவராத்திரி விழா துவக்கம் appeared first on Dinakaran.