- குணத்துக்கடவு ரயில் நிலையம்
- புனட்டுகடவு
- குனடுகடவ் ரயில் நிலையம்
- பொள்ளாச்சி
- கோவா
- பொத்தனூர்
- குனடுகடவ்
- கெனத்துக்கடவு ரயில் நிலையம்
- தின மலர்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி 2010ம் ஆண்டு தொடங்கி 2017ம் ஆண்டு முடிவடைந்தது.இதனைத்தொடர்ந்து கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்செந்தூர் என பல ஊர்களுக்கு ரயில் சென்று வருகிறது.
இந்த நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பொள்ளாச்சி மார்க்கமாக பயணம் செல்லும் பயணிகள், நடைபாதை மேம்பாலம் இல்லாததால் தண்டவாளத்துக்குள் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், இங்கு நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, ரயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து, ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், இருபுறமும் சென்று ரயிலில் பயணம் செய்யும் வகையில், தற்போது இரும்பினாலான நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.