×

ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக, 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது!

ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.

சாம்சங்க் நிறுவனம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான பணியாளர்களை சரிசெய்து வருகின்றன. எந்தவொரு குறிப்பிட்ட பதவிகளுக்கும் பதவி காலம் தொடர்பாக நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை” என்றார். மேலும், சாம்சங் பங்குகள் இந்த ஆண்டு 20% க்கும் அதிகமாக சரிந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சாம்சங் அதன் மொத்த ஊழியர்களான 147,000 பேரில் 10% க்கும் குறைவாகவே குறைக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் நிறுவனம் மேலாண்மை மற்றும் ஆதரவு செயல்பாடுகளை குறைக்கும் போது உற்பத்தி வேலைகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. சாம்சங் தனது சிப் வணிகத்தின் தலைவரை இந்த ஆண்டு திடீரென மாற்றியது மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ஜுன் யங்-ஹியூன், நிறுவனத்தின் பணியிட கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

The post ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.

Tags : Samsung Electronics ,Asia ,SOUTHEAST ASIA ,AUSTRALIA ,NEW ZEALAND ,Dinakaran ,
× RELATED ஆசிய பசிபிக் காதுகேளாதோருக்கான...