பெரம்பலூர், அக்.4: வடக்கு மாதவி கிராமத்தில் 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய விவசாயியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் அருகேயுள்ள வடக்கு மாதவி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(எ) கருப்பையா(38). இவர் நேற்றிரவு 8மணியளவில் வயலில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண் டிருந்தபோது தவறுதலாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து விட்டார். இது குறித்து தகவல் பெறப் பட்டதும் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை உயிரு டன் மீட்டனர்.
மேற்படி மீட்புப் பணியில் நிலையப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி முன்னணி தீ அணைப் பாளர் ஜெகன், வி.பி.சிங், தர், சிவா, மனோஜ், குமார் உள்ளிட்ட தீயணைப் பாளர்களளும் மீட்பு பணி யில் ஈடுபட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட நபர் பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம் பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
The post 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய விவசாயி மீட்பு appeared first on Dinakaran.