- சிங்கப்பெருமாள் கோயில்
- Jalli
- போக்லைன்
- செங்கல்பட்டு
- அபூர்
- சிங்கப்புருமாள் கோயில்
- ஆடோ நகர்
- அபூர் கிராமம்
- சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர் கிராமத்தில் சாலையை தோண்டி ஜல்லி, மண் கடத்தல் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் ஆட்டோ நகர் உள்ளது. இங்கு, அரசு சார்பில் வீட்டு மனைப்பிரிவுகளில் ஜல்லி மண் வைத்து சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை சில மர்ம நபர்கள் தோண்டி எடுத்து அதில் உள்ள ஜல்லி, மண் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை பயன்படுத்தி திருடி, அருகில் உள்ள தொழிற்சாலை பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஆப்பூர் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ேதாண்டி எடுப்பதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சாலையை தோண்டி எடுக்கும்போது பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்தும் மண், ஜல்லி திருடுவதற்கு பயன்படுத்திய லாரி மற்றும் டிரைவர் தப்பியோடிவிட்டனர். இது சம்மந்தமாக தாசில்தார், கிராமநிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சிங்கபெருமாள் கோயில் அருகே சாலையை தோண்டி ஜல்லி, மண் கடத்தல்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.