×
Saravana Stores

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு

பெங்களூரு: சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர் என்றும், அவர் பசுவதைக்கு எதிரானவர் இல்லை என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில்,‘சாவர்க்கர் ஒரு பிராமணர். ஆனால் அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார். அவர் அசைவ உணவு உண்டார். சாவர்க்கர் பசுவதையை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர் இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக ஊக்குவித்தார். சாவர்க்கரின் கருத்துகள், மகாத்மா காந்தியின் கருத்துகளுடன் முரண்படுகிறது. சாவர்க்கரின் சித்தாந்தம் அடிப்படைவாதம் பக்கம் சாய்ந்தது. ஆனால் காந்தி ஆழமான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். காந்தி இந்து கலாச்சார பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் காந்தி சைவ உணவுகளையே உண்டார். அவர் தனது அணுகுமுறையில் ஜனநாயகவாதியாக இருந்தார் என்றார்.

The post சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Savarkar ,Karnataka ,Minister ,Dinesh Kundurao ,Bengaluru ,State Health Minister ,Dinakaran ,
× RELATED கர்நாடகா மலைக் கோயிலில் தவறி விழுந்து 12 பேர் காயம்..!!