×
Saravana Stores

பெண்கள் உலக கோப்பை டி20: முதல் ஆட்டத்தில் வங்கம் வெற்றி

ஷார்ஜா: ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பை நேற்று ஷார்ஜாவில் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அங்கு நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள வங்கதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வங்கம் தட்டு தடுமாறி ரன் சேர்த்தது. அதனால் 20ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 119ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷோபனா மோஸ்தரி 36, ஷாதி ராணி 29 ரன் எடுத்தனர். ஸ்காட்லாந்து தரப்பில் சாஸ்கியா ஹோர்லி 2ஓவர் வீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

அதனையடுத்து 120ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. ஆனால் அந்த அணியும் முட்டி மோத, தொடக்க ஆட்டக்காரர் சாரா பிரய்ஸ் 49ரன் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார். ஆனாலும் 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து 7விக்கெட் இழப்புக்கு 103ரன் மட்டுமே எடுத்தது. அதனால் வங்கம் 16ரன் வித்தியாசத்தில் வங்கம் முதல் வெற்றியை பதிவு செய்தது. கூடவே கடந்த 10 ஆண்டுகளில் உலக கோப்பைகளில் வங்கத்தின் முதல் வெற்றி இது. மொத்தத்தில் 3வது வெற்றி. அந்த அணியின் ரீட்டு மோனி 2விக்கெட் எடுத்தார்.

The post பெண்கள் உலக கோப்பை டி20: முதல் ஆட்டத்தில் வங்கம் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Women's World Cup T20 ,Bengal ,Sharjah ,ICC Women's T20 World Cup ,Australia ,Bangladesh ,Scotland ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த...