- இந்தியா
- மாநில துறை
- எங்களுக்கு
- புது தில்லி
- வெளியுறவு அமைச்சகம்
- ஐக்கிய மாநிலங்கள்
- சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்
புதுடெல்லி: இந்தியா மத சுதந்திரத்தை மீறும் செயல்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இதனை புறந்தள்ளியுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவில் மத சுதந்திரம் என்பது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா மத சுதந்திரத்தை கடுமையாக மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பற்றிய எங்கள் கருத்துக்கள் நன்கு அறியப்பட்டவை. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை கொண்ட ஒருசார்புடைய அமைப்பாகும். இது தொடர்ந்து உண்மைகளை தவறாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தியாவை குறித்த பொய்யான கதையை கூறுகிறது. தீங்கை விளைவிக்கக்கூடிய இந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தை மேலும் இழிவுபடுத்தவே இந்த அறிக்கை உதவுகின்றது. அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் பிரச்னைகளை தீர்ப்பதில் தனது நேரத்தை ஆணையம் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.
The post இந்தியாவில் மத சுதந்திரம் மிகவும் மோசம்: அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு வெளியுறவு துறை கண்டனம் appeared first on Dinakaran.