×

உ.பி. கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பின் தலைவர் கைது

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை நடத்தி வந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சனாதன் ரஷக் தளத்தின் தலைவரான அஜய் சர்மா, கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பல்வேறு கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அஜய் சர்மா தலைமையில் சென்றவர்கள் அகற்றினர். இதுவரை 14 கோயில்களில் இருந்து சிலைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் அகற்றப்படும் என்றும் கூறியிருந்தார். வாரணாசியில் சிவன் வழிபாடு மட்டுமே நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். அவரின் இந்த நடவடிக்கை மற்றும் பேச்சுக்கு சாய்பாபா பக்தர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கோயில்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி அஜஸ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post உ.பி. கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பின் தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : UP ,Hindu ,Sai ,Varanasi ,Sai Baba ,Uttar Pradesh ,Sanatan Rashak Dal ,Ajay Sharma ,
× RELATED பாலியல் குற்றங்கள் குறித்து...