×

புதுக்கோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட 750 சவரன் நகைகள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து மீட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வீட்டில் இருந்து திருடப்பட்ட 750 சவரன் நகைகள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர் ஜாதிக். இவர் குடும்பத்துடன் புருனை நாட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டு பெண்மணி பார்க்கையில் ஜாபர் ஜாதிக் வீட்டின் பக்கவாட்டு தரையில் மிளகாய் பொடி தூவி இருந்ததை கண்டு உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு கீழ்தளத்தில் உள்ள இரண்டு அறைகளும், மாடியில் உள்ள இரண்டு அறைகளும் உடைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உறவினர்கள் ஜாபர் ஜாதிக்கிடம் கேட்டபோது மேல் இருக்கின்ற ஸ்டோர் ரூமில் அட்டைப்பெட்டி ஒன்றில் 750 சவரன் நகை வைத்திருந்ததாகவும் 50,000 ரூபாய் ரொக்கம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்ததில் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த 750 சவரன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேலும் 50,000 ரூபாய் ரொக்கம் கொள்ளை போயிருந்தது.இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெற்றது. நேற்று டிஐஜி சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து திருட்டு சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் விசாரணையும், சிசிடிவி ஆய்வுகளும் நடந்து வந்தன. இந்நிலையில் ஜாபர் ஜாதிக் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் உள்ள தண்ணீரை இரைத்து பார்க்கலாம் என்று நினைத்து தண்ணீரை இரைத்து பார்த்தபோது கிணற்றில் உள்ளே ஒரு பிளாஸ்டிக் கவரில் நகைகள் வைக்கப்பட்டு உள்ளே கிடந்துள்ளது. இன்று காலை அதனை கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எத்தனை சவரன் நகை அதில் உள்ளது. கொள்ளை போனது எத்தனை சவரன் என்பது குறித்த விசாரணையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் ஜாபர் ஜாதிக் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்….

The post புதுக்கோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட 750 சவரன் நகைகள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து மீட்பு appeared first on Dinakaran.

Tags : Savaran ,Pudukottai ,Mimisal ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில்...