×

தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு!!

டெல்லி: தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர் என்று நடிகையும், பாஜ எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 2ம் தேதியான நேற்று காந்தி பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 120வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடிகையும், பாஜ எம்.பி.யுமான கங்கனா ரானாவத் மரியாதை செலுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தேசத்திற்கு தந்தைகள் கிடையாது, மகன்கள் உள்ளனர். பாரத அன்னையின் இந்த மகன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’ என பதிவிட்டிருந்தார்.

மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி கங்கனா இவ்வாறு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். நேற்று மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கங்கனா ரனாவத் இவ்வாறு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தி நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதை மனதில் வைத்துதான் கங்கனா ரனாவத் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

The post தேசத்திற்கு தந்தைகள் கிடையாது; மகன்கள் உள்ளனர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் மீண்டும் சர்ச்சை பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Bajaka M. B. Kangana Ranaut ,Delhi ,Baja M. B. Yuma Kangana Ranaut ,Gandhi ,Lal Bahadur Shastri ,BJP ,M. B. Kangana Ranaut ,
× RELATED டெல்லி-நொய்டா சாலையில் சுங்கம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை..!!