×

ரயில் தண்டவாளத்தில் தீயணைக்கும் கருவி

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள அம்பியூர் ரயில் நிலையம் நோக்கி நேற்று காலை சரக்கு ரயில் சென்று கொண்டு இருந்தது. ரயில் நிலையத்தை நெருங்கும் நிலையில், தண்டவாளத்தில் சிலிண்டர் கிடப்பதை ரயில் ஓட்டுனர் பார்த்துள்ளார். இதனை அடுத்து அவசரகால பிரேக்கை அழுத்தி சரக்கு ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் தண்டவாளத்தில் கிடந்தது தீயணைக்கும் கருவி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. தீயணைக்கும் கருவி வேறு ரயிலில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரயில் தண்டவாளத்தில் தீயணைக்கும் கருவி appeared first on Dinakaran.

Tags : Kanpur ,Ambiyur railway station ,Kanpur, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED லாரிகள் மோதி விபத்து காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு