×

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்

வாஷிங்டன்: பள்ளி குழந்தைகள் சண்டையிடுவது போல் இஸ்ரேல், ஈரான் மோதிக்கொள்வதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் அமெரிக்காவில் பரப்புரை மேற்கொண்டபோது இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் தற்போது இரு நாட்டிலும் நிலைமை மோசமடைந்து உள்ளதாக கூறினார்.

இவ்விரு நாடுகளும் பள்ளி குழந்தைகள் சண்டையிடுவது போல் மோதி கொள்வதாகவும் டிரம்ப் விமர்சனம் செய்தார். இதனிடையே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பேசிய துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், இஸ்ரேல் மீதான ஈரானில் ஏவுகணை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த செயல் மூலம் மத்திய கிழக்கில் ஈரான் பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளதாகவும் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

The post பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Israel ,US ,Donald Trump ,Washington ,President ,Iran ,Trump ,Republican Party ,United States ,President Donald Trump ,Dinakaran ,
× RELATED ஹவுதி ராணுவ வளாகத்தில் குண்டு வீசி தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்