×

சத்தியமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

சத்தியமங்கலம், அக்.2: சத்தியமங்கலம் நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் ஜானகிராமசாமி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் செல்வம், துணைத் தலைவர் நடராஜ், பொறியாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் வசதி தெருவிளக்கு மற்றும் வடிகால் வசதி குறித்து விவாதம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி வர்த்தகம், வியாபாரங்கள், தொழிற்சாலைகள் தொழிலகம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக உரிமம் வழங்க உரிமை கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக மாவட்ட அரசிதழில் வெளியிடவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பான வழிகாட்டுதலுக்கு குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது குறித்து மன்றத்தின் பார்வைக்கு வைத்தல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post சத்தியமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam Municipal Council ,Sathyamangalam ,Sathyamangalam Municipal Hall ,Municipal ,President ,Janakiramasamy ,Commissioner ,Selvam ,Deputy Chairman ,Nataraj ,Engineer ,Kathirvel ,Sathyamangalam Municipal Council meeting ,Dinakaran ,
× RELATED மது-புகையிலை விற்ற 3 பேர் கைது