- டோல்மிடி
- குட்கா
- பாப்ரிடிபார்
- தர்மபுரி
- தர்மபுரி மாவட்டம்
- கலெக்டர்
- சாந்தி
- மாவட்ட நியமனம் அலுவலர்
- டாக்டர்
- பானு சுஜாதா
- பொம்மிடி
- பாப்பிரெட்டிப்பட்டி
- திப்ரீத்தி அல்லி
- கொப்பக்காரி
- கோபப்பட்டி
- பொப்பெடிபார்
தர்மபுரி, அக்.2: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்பேரிலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா அறிவுறுத்தலின்பேரிலும், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, திப்பிரெட்டி அள்ளி, சிங்கம்பட்டி அருகே கொப்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் ஆகியோர் போலீசாருடன் குட்கா மற்றும் ஹான்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு தலா ₹25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற திடீர் ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தெரிவித்தார்.
The post பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டியில் குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.