- நிர்மலா சீதாராமன்
- காங்கிரஸ்
- புது தில்லி
- மத்திய அமைச்சர்
- கர்நாடக
- பாஜக
- ஜனாதிபதி
- விஜயேந்திரா
- நளின் குமார் கதீல்
- பெங்களூரு
- தின மலர்
புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகா பாஜ தலைவர் விஜயேந்திரா மற்றும் பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்டோர் மீது பெங்களூரு நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் பிரிவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் வீட்டின் அருகே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர். சிலர் போலி ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
The post தேர்தல் பத்திர திட்ட முறைகேடு நிர்மலா சீதாராமன் வீடு அருகே காங். போராட்டம் appeared first on Dinakaran.