- முத்துப்பேட்டை
- முத்துப்பேட்டை, அக்
- தேசிய நல திட்ட முகாம்
- பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- முத்துப்பேட்டை கோவிலூர்
- திருவாரூர் மாவட்டம்
- பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- ஜனாதிபதி
- எம். எஸ் கார்த்திக்
- மாலினி…
- மஹாளய அமாவாசை அனுமன்
- என்.எஸ்.எஸ்
- முத்துபேட்டை
முத்துப்பேட்டை, அக். 1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக த்தலைவர் எம்எஸ் கார்த்திக் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முன்னதாக தலைமையாசிரியை மாலினி வரவேற்றார். கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத் தலைவர் ஆறுமுக சிவகுமார் கவுன்சிலர் லட்சுமி செல்வம் முன்னிலை வகித்தனர்.
இதில் பலரும் வாழ்த்தி பேசினார்கள். தொடர்ந்து முதல்நாள் பணியாக உழவாரப்பணியில் மாணவிகள் ஈடுபட்டனர் தொடர்ந்து யோகா மற்றும் மனவளக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மனவளக்கலை பேராசிரியர் சுதாநாதன், நிர்வாகி சரோஜா பங்கேற்றனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ அய்யப்பன், பாலசுப்பிரமணியம், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் உதவி திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியைகள் கலந்துக்கொண்டனர். நிறைவில் உதவி தலைமையாசிரியை வனிதா நன்றி கூறினார்.
நாளை நடக்கிறது
திருத்துறைப்பூண்டி, அக்.1: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் திருக்கோயில் மற்றும் 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு மகாளய அமாவாசை வழிபாடு புரட்டாசி மாதம் 16ம் தேதி நாளை அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது. புதன்கிழமை காலை 6 மணிக்கு 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் அதனைத்தொடர்ந்து இரவு 9 மணி வரை அர்ச்சனைகள் நடைபெறும். அமாவாசையில் அனுமனை வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பது ஐதீகம். எனவே கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
The post மகாளய அமாவாசை அனுமன் வழிபாடு முத்துப்பேட்டை அருகே என்எஸ்எஸ் முகாமில் மாணவிகள் உழவாரப்பணி appeared first on Dinakaran.