×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2,718 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3,284 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 96.19 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று காலை 95.30 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 58.92 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு