×

உத்திரமேரூரில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள்: எம்எல்ஏ சுந்தர் அடிக்கல் நாட்டினார்

 

உத்திரமேரூர்: உத்திமேரூரில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்களுக்கு எம்எல்ஏ சுந்தர் அடிக்கல் நாட்டி வைத்தார்.  உத்திரமேரூர் அடுத்த, நல்லூர் மற்றும் சோமநாதபுரம் கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு புதியதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

மேலும், புதியதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் தரமானதாகவும், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார். நிகழ்வின்போது, இளைஞரணி நிர்வாகி அன்புராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூரில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள்: எம்எல்ஏ சுந்தர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Anganwadi Centers ,Uttaramerur ,MLA Sundar ,Uttamerur ,Anganwadi ,Nallur ,Somanathapuram ,Assembly ,Dinakaran ,
× RELATED செய்யாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக...