×

தாராவி மறுசீரமைப்பு திட்ட விவகாரம் 255 ஏக்கர் உப்பள நிலத்தில் வீடுகள் கட்டித்தர ஒப்புதல்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: மும்பை தாராவி பகுதியில் குடிசைகளை இடித்து விட்டு, தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ஏலம் மூலமாக அதானி குழும நிறுவனம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தாராவியில் வசிக்கும் பலரும் இலவச வீடுகளை பெற தகுதியற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு வேறு பகுதியில் மலிவு விலை வாடகை வீடுகளை கட்டித்தர திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக மவுஜே கஞ்சூரில் 120.5 ஏக்கர், கஞ்சூர் மற்றும் பாண்டுப்பில் 76.9 ஏக்கர், முலுண்டில் 58.5 ஏக்கர் என மொத்தம் 255.9 ஏக்கர் உப்பள நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் ஒன்றிய அரசுக்கு சொந்தமானது. எனவே இவற்றை குத்தகைக்கு தர மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. இதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு இம்மாத தொடக்கத்தில் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 255.9 ஏக்கர் உப்பள நிலத்தில் வீடுகள் கட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

The post தாராவி மறுசீரமைப்பு திட்ட விவகாரம் 255 ஏக்கர் உப்பள நிலத்தில் வீடுகள் கட்டித்தர ஒப்புதல்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra Govt. ,MUMBAI ,Dharavi ,Adani Group ,Maharashtra Government ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!