×

ஹிட்லருக்குபின் மிக பெரிய தீவிரவாதி நெதன்யாகு: பிடிபி தலைவர் மெகபூபா கடும் தாக்கு

ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா நேற்று நிருபர்களிடம் கூறுகையில்‘‘ பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தியதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது லெபனானில் நடந்த தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோரை கொன்றார் என்பதும் தற்போது அதே போன்று லெபனானிலும் அவர் செய்கிறார் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
ஹிட்லருக்கு பின் மிக பெரிய தீவிரவாதி நெதன்யாகு. இஸ்ரேல் அரசுடன் ஒன்றிய அரசு உறவு வைத்திருப்பது தவறு. மக்களை கொல்ல உதவும் ஆயுதங்கள், டிரோன்களை இஸ்ரேலுக்கு வழங்குவது தவறு’’ என்றார்.

The post ஹிட்லருக்குபின் மிக பெரிய தீவிரவாதி நெதன்யாகு: பிடிபி தலைவர் மெகபூபா கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Netanyahu ,Hitler ,PDP ,Megabooba ,Srinagar ,Kashmir ,chief minister ,Mehbooba ,International Criminal Court ,Palestine ,Lebanon ,Dinakaran ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...