மதுரை: திரைப்பட இயக்குநர் மோகனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும். மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். பழனி காவல் நிலையத்தில் தினந்தோறும் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது. திரைப்பட இயக்குநர் மோகன், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு appeared first on Dinakaran.