×

ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் உள்ளன?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள், கண்மாய்கள் உள்ளன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை தூர்வார தன்னார்வலர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். ஏரிகளின் பரப்பளவு, அதன் கொள்ளளவு எவ்வளவு என்றும் கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் உள்ளன?.. ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,iCourt ,Madurai ,Madurai branch ,High Court ,Satish ,Ramanathapuram ,iCourt Branch ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி