சீனா: நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயை எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சீன மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கக் காரணமான செல்களை சிலரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் அழித்துவிடுகின்றன. தானாகவே இன்சுலின் சுரக்கும் செல்கள் அழிக்கப்படுவதால் முதல் வகை சர்க்கரை நோய் மனிதனுக்கு ஏற்படுகிறது. முதல் வகை சர்க்கரை நோய்க்கு உடலுக்குள் இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சீன மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை எடுத்து அதில் இன்சுலின் சுரப்பியை ஊக்குவிக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்து உடலில் செலுத்தியுள்ளனர். இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் எலும்புகள் சர்க்கரை நோயாளிகள் உடலுக்குள் சென்றதும் இன்சுலின் சுரக்க தொடங்கிவிட்டது. இன்சுலின் முழுமையாக சுரக்காததால் ஏற்படும் முதல்வகை சர்க்கரை நோயை குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். எலும்பு மஜ்ஜையில் மரபணுக்கூறு மாற்றம் செய்து அதைக் கொண்டு சிகிச்சை அளித்து சர்க்கரை நோயை குணப்படுத்தியுள்ளனர்.
The post சர்க்கரை நோயை எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சீன மருத்துவர்கள் சாதனை..!! appeared first on Dinakaran.