×

மீனவர் வலையில் சிக்கிய முதலை மீன்

நாகை: நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு மீனவரின் வலையில் அதிசய முதலை மீன் சிக்கியது. அதன் தலை மற்றும் பற்கள் முதலை போலவும், உடல் முதலையின் கடினமான தோல் போலவும் இருந்தது. வால் பகுதி மட்டும் கொடுவா மீனை போல் இருந்தது. இதை மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கிடைத்த இந்த முதலை மீன் 3 அடி நீளம், 10 கிலோ எடை கொண்டதாக இருந்தது. வலையில் சிக்கிய மீனை கரைக்கு கொண்டு வந்து எடுக்கும்போது உயிரோடு இருந்தது. அதன்பிறகு இறந்து விட்டது. ஒரு சில மீனவர்கள் இது மீன் இனத்தை சேர்ந்தது இல்லையென கூறினர். சிலர் இது அரியவகை மீன் என்று கூறினர்….

The post மீனவர் வலையில் சிக்கிய முதலை மீன் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagai Akkaripet ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில்...