சென்னை, செப்.30: ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐ-போன் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் டிசிஎஸ் நிறுவனம், டாடா கெமிக்கல்ஸ், டைடன், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருக்கின்றோம். இதனை தொடர்ந்து ஒசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் புதிய ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கவுள்ளது. இந்த தொழிற்சாலை தொடங்குவது மூலமாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது கிடைக்கப்பெறும்.
மேலும், தொழிற்சாலை வளர்ச்சியடையும் போது 40 ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாது, ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் அமையவுள்ள டாடா நிறுவனத்தின் ஜெ.எல்.ஆர் தொழிற்சாலை மூலமாக 5 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு உருவாக உள்ளது.
The post ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல் appeared first on Dinakaran.