×

மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி(72) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 12ம் தேதி காலமானார். இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நேற்று நியமிக்கப்பட்டார். டெல்லியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற உள்ளது. அது வரை இடைக்கால ஏற்பாடாக கட்சியின் பொலிட்பீரோ, மத்திய குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் பதவி வகிப்பார் என்று அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Prakash Karat ,NEW DELHI ,SITARAM YECHURI ,MARXIST COMMUNIST PARTY ,Prakash Karath ,Marxist Communist Central Committee ,Delhi ,Dinakaran ,
× RELATED எப்போது வேண்டும் என்றாலும் பிஎப்...