- எக்மோர் குழந்தைகள் மருத்துவமனை
- சென்னை
- அருணா ராஜேந்திரன்
- அரசு குழந்தைகள் மருத்துவமனை
- எக்மோர், சென்னை
- சங்கர்-ஜானகி
- பாப்பாபட்டி, திருச்சி மாவட்டம்
சென்னை: அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையான சிறுவனுக்கு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் அருணா ராஜேந்திரன், ஸ்டெம்செல் தானத்தைப் பெற்று அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
திருச்சி மாவட்டம் பாப்பாபட்டியைச் சேர்ந்த விவசாயி சங்கர்-ஜானகி தம்பதியின் மூத்த மகன் சிறுவன் செல்வா (வயது 11) 7ம் வகுப்பு படித்து வருகிறார். பான்கோனி அனீமியா என்ற அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட இச் சிறுவன், அதனால் ஏற்பட்ட எலும்பு மஜ்ஜை செயலிழப்பால் படுத்த படுக்கையானார். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையின் ஹீமாட்டாலஜி துறையின் இணை பேராசிரியரும், எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவின் பொறுப்பாளருமான மருத்துவர் அருணா ராஜேந்திரன், சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்பதை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தார்.
பெற்றோரின் ஸ்டெம் செல்பொருந்தாததால், ஸ்டெம்செல் தானம் அளிக்க விரும்புபவர்களின் விவரங்களைப் பதிவு செய்து சேவை ஆற்றி வரும் டிகேஎம்எஸ்- பிஎம்எஸ்டி என்கிற அறக்கட்டளையின் உதவியை நாடினார். அப்போது, அந்த அறக்கட்டளையில் பதிவு செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த கிளினிக்கல் பார்மசிஸ்ட் மருத்துவர் ஸ்மிதா ஜோஷி என்பவரின் ஸ்டெம்செல் சிறுவன் செல்வாவுக்கு பொருத்தமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்மிதா ஜோஷி, ஸ்டெம்செல்லை தானம் அளித்தார். ஸ்டெம் செல் மாற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர், சிறுவன் செல்வா பூரணமாக குணமடைந்துள்ளார்.
The post எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்டெம்செல் தானம் பெற்று சிறுவனுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.