×

ஹெலன் புயல் தாக்கி அமெரிக்காவில் 64 பேர் பலி

பெர்ரி: அமெரிக்காவில் ஹெலன் புயல் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வியாழனன்று பலவீனமடைந்த ஹெலன் புயல் புளோரிடா மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

மேலும் ஹெலன் புயலால் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை சந்தித்தன. மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், மரங்கள், மின்கம்பங்கள் இடிந்து விழுந்தன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி இருளில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் ஹெலன் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.

The post ஹெலன் புயல் தாக்கி அமெரிக்காவில் 64 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Hurricane Helen ,US ,Florida ,United States ,Southeast ,Helen ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் : பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!!