×
Saravana Stores

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு

சித்தூர்: சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாநகராட்சி ஆணையர் நரசிம்ம பிரசாத் நேற்று காலை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் பொறியியல் துறை அதிகாரிகளுடன் மழை நீர் தேங்கும் இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது: தற்போது மழைக்காலம் என்பதால் சித்தூர் மாநகரத்தில் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை நீர் குட்டைபோல் போல் தேங்கி நிற்கிறது. இதனை போர்க்கால அடிப்படையில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் பொறியியல் துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

நேற்று காலை நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டேன். எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் வடிகால் ஆய்வு செய்யப்பட்டது. கழிவுநீர் கால்வாயை அவ்வப்போது அகற்றி, மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாம்பழ மார்க்கெட் யார்டில் உள்ள கல்வெர்ட் ஆய்வு செய்யப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் வருவதை அவ்வப்போது சரிபார்த்து கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மழையின் பின்னணியில், கால்வாய்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில், மூலக் கால்வாய்கள் அமைக்க வேண்டும். சுகாதார மேலாண்மையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

The post சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chittoor Municipality ,Chittoor ,Municipal Commissioner ,Narasimma Prasad ,Municipal Department of Public Health and Engineering Department for Rainwater ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மழை பாதிப்பை...