×
Saravana Stores

அம்மாபாளையத்தில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பெரம்பலூர், செப்.29: பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வை வழங்க வேண்டும் தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மாபாளையம் கிராம பெண்களிடம் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டஎஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, பெரம்பலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் டாக்டர் வனிதா, பெரம்பலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல்., மற்றும் ஒன் ஸ்டெப் சென்டர் கவுன்சிலர் (ONE STOP CENTRE Councillor) பிரேமா ஆகியோர் இணைந்து அம்மா பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் பெண் கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

நேற்று (28ம்தேதி) சனிக் கிழமை நடைபெற்ற இந்த விழிப்புணர்வுநிகழ்ச்சியில்பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து பேசும்போது, குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம்,கல்வியின் முக்கியத் தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடை நின்ற மாணவ, மாணவி களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற் படும் தீமைகள் குறித்தும், அதனை அருந்தி உயிரிழப் பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் தங்களது பகுதி களில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருட் களை விற்பனை செய்யும் நபர்கள்பற்றிய விவரங்கள் தெரிந்தால், காவல் துறை யினருக்கு தகவல் தெரி விக்கலாம்.தகவல் தெரி விப்போரின் முகவரி உள் ளிட்ட விவரங்கள் இரகசி யம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.அதோடு Women Help Desk-ஐ அழைக்கும் எண் 112, குழந்தைகளுக்கு எதி ரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க அழைக்கும் எண் 1098,பள்ளி குழந்தைக ளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோர் உதவி எண்கள் 14567, ஒவ் வொரு காவல் நிலையத்தி லும் செயல்படும் உதவி எண்களான சட்டவிரோத மது விற்பனை புகார் எண் 10581, பெண்கள் உதவி மையம் இலவசத் தொலை பேசிஎண் 181, கிரைம் உதவிஎண்கள் 1930 ஆகிய வற்றைப்பற்றி விளக்கிக் கூறினார்.

அப்போது, ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கான தீர்வினை வழங்க வேண் டும். பெற்றோர்கள் ஒவ் வொருவரும் தன் பிள்ளை களுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) பற்றி கட்டாயம் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறினர்.
நிகழ்ச்சியின் முடிவில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைத் திருமணத்தை எதிர்ப்போம் என கிராம பெண்களை உறுதி மொழி ஏற்கச் செய்தனர்.

The post அம்மாபாளையத்தில் காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Ammapalayam ,Perambalur ,Perambalur district ,Dinakaran ,
× RELATED நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்...