- அருணாச்சல பொறியியல் கல்லூரி
- நாகர்கோவில்
- IEI கன்னியாகுமரி பிரிவு
- அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி
- வெள்ளிச்சந்தி
- ஜோசப் ஜாவகர்
- ரியாசா ஆய்வகம்
- நாகர்கோவில், ஆறுமுக
- தின மலர்
நாகர்கோவில், செப். 29: வெள்ளிச்சந்தை அருகே உள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி ஐ.இ.ஐ கன்னியாகுமரி பிரிவு சார்பாக நடைபெற்றது. முகாமை கல்லூரியின் முதல்வர் ஜோசப் ஜவகர் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் ரியாசா லேப் இயக்குனர் ஆறுமுக பெருமாள் மற்றும் சேவியர் கல்லூரியின் பேராசிரியர் மார்சலின் பெனோ இணைந்து நடத்தினர். செயற்கை நுண்ணறிவு குறித்த தகவல்கள், எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் இது பயன்படும், தற்போது பயன்படுத்தப்படும் துறைகள் மற்றும் இத்துறையின் சமூகம் சார்ந்த பங்களிப்பு ஆகியவை பற்றி விரிவாக பயிற்சியளித்தனர். மேலும் பல்வேறு துறைகளில் இதற்கான வேலைவாய்ப்பு பற்றி எடுத்துரைத்தனர். கன்னியாகுமரி ஐ.இ.ஐ அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் கணினி துறை மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். கல்லூரியின் ஐ.இ.ஐ அமைப்பு சார்பாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஷர்மிளா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
The post அருணாச்சலா பொறியியல் கல்லூரியில் நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.