தொண்டி,செப்.29: தொண்டியில் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தேவி, பூ மாதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோவில் உள்ளது.இங்குள்ள மூலவர் பெருமாள் மற்றும் அம்பாள் சிலைகள் சுமார் 8 அடி உயரம் உள்ளது, சுற்று வட்டாரத்தில் இவ்வளவு பெரிய சிலை வேறு கோயிலில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.இக்கோயிலில் புரட்டாசி மற்றும் மார்கழி மாதம் முழுவதும் பூஜைகள் நடைபெறும். நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் உற்சவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ள்ட்ட 12 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.