- காரைக்குடி
- இளைஞர் ஆண்கள் கிளப்
- செல்லப்பன் வித்யமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்
- ராஜேஸ்வரி
- சத்யன்
- தின மலர்
காரைக்குடி, செப்.29: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் ஒய்ஸ் மென் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பள்ளி கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி வரவேற்றார். பள்ளி தாளாளர் சத்தியன் தலைமை வகித்து துவக்கி வைத் தார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், ஒய்ஸ் மென் கிளப் தலைவர் கமல்தயாளன், செயலாளர் தங்கதுரை, பொருளாளர் முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேஜர் டோனர் மஹாராஜா ஆயில் பெவின், ஒய்ஸ் மென் சகோதரர்கள் டாக்டர்கள் திருப்பதி, ஆதவன், மூன்ஸ்டார் லட்சுமணன், ராசி டிவிஎஸ் சந்தியாகு, சாமி மெடிக்கல் சங்கர், தெய்வானை சுரேஷ், குமார், மெய்யப்பன், ராஜா, அடைக்கப்பன், லோகநாதன், மதன், வீரசேகர், பிரித்வி, கவுதம், நவீனா கமல்தயாளன், குருதி கொடையாளர்கள் சங்க நிர்வாகி முனைவர் பிரகாஷ் மணிமாறன், பள்ளி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அரசு தலைமை மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர். 70க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்க பதிவு செய்திருந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரத்த தானம் பெறப்பட்டது. துணை முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.
The post பள்ளியில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.