×
Saravana Stores

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப்போட்டுள்ள ஹெலீன் புயலால் 33 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. புளோரிடா அருகே பெரி என்ற இடத்தில் கரையை கடந்த ஹெலீன் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்தன. புயலால் புளோரிடா, ஜார்ஜியா, டென்னிசி உள்ளிட்ட மாகாணங்கள் பெரிய அளவிலான சேதங்களை சந்தித்துள்ளன.

கனமழையால் சாலைகளில் ஏரி போல் தண்ணீர் மூழ்கியது. இதனிடையே தெற்கு பகுதியில் வீடு ஒன்றில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கின. தண்ணீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கி கொண்டவர்கள் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இத்தகைய கடும் பாதிப்பை எதிர்பார்க்க வில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

டென்னிசி மாகாணத்தில் எர்வின் வெள்ளம் சூழ்ந்த மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் ஹெலிகாப்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவமனை மாடியில் இருந்து 50 பேரை 2 ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு குழுவினர் மீட்டனர். அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப்போட்ட புயல், மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழந்தனர். புளோரிடா முதல் டென்னிசி வரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் மின்சார வசதி இன்றி இருளில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ள ஹெலீன் புயல்: மழை பாதிப்பால் 33 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Hurricane Helene ,southeastern part of the ,United States ,Washington ,Perry ,Florida ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து 4 நாட்களாக நடந்த அமெரிக்கா...