×

மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் திட்டம் செயல்படுத்த ரூ.4.25 கோடிக்கு ஒப்புதல்: தமிழக அரசு அனுமதி

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ‘புலிகள் திட்டம்’ ரூ.4.25 கோடியில் செயல்படுத்துவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசின் முதன்மை செயலாளர் சுப்ரியாகு சாகு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் அமைச்சகம் தனது கடிதத்தில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ‘புலிகள் திட்டம்’ 2021-22ம் ஆண்டில் ரூ.425.462 லட்சத்தில் செயல்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.234.52 லட்சம். மாநில அரசின் பங்கு ரூ.190.942 லட்சம் என மொத்தம் ரூ.425.462 லட்சமாகும். ஒன்றிய அரசு தனது பங்கான ரூ.234.52 லட்சத்தில் முதல் தவணையாக ரூ.117.26 லட்சத்தை விடுவித்தது. மேலும் அப்போது பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த பிறகு மீதம் உள்ள தொகை இரண்டாவது தவணையாக வழங்கப்படும்’ என தெரிவித்து இருந்ததாக தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ‘புலிகள் திட்டத்தை’ 2021-22ம் ஆண்டில் செயல்படுத்துவதற்கு முதல் தவணையாக ரூ.212.731 லட்சத்தை வழங்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை கருவூல அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்’ எனத்தெரிவித்து இருந்தார். இதனை கவனமாக பரிசீலனை செய்த அரசு ரூ.4,25,46,200யை ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல் தவணையாக ரூ.2,12,73,100 வழங்கப்படும். பிறகு அடுத்த தவணை வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் திட்டம் செயல்படுத்த ரூ.4.25 கோடிக்கு ஒப்புதல்: தமிழக அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tigers ,Megamalai Tigers Archive ,Government of Tamil Nadu ,Chennai ,Srivilliputtur ,Magamalai Tigers Archive ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி...