×

கடுமையாக உழைப்பவர் ராகுல்: பாலிவுட் நடிகர் சைப் அலிகான் புகழாரம்

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சையீப் அலிகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தான் மிகவும் துணிச்சலான மற்றும் நேர்மையான அரசியல்வாதியை விரும்புவதாக தெரிவித்தார். பிரதமர் மோடி, ராகுல்காந்தி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரில் யார் தைரியசாலி மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவை வழிநடத்தக்கூடியவர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் சையீப் கான், அனைவரும் தைரியமான அரசியல்வாதிகள் தான். ராகுல்காந்தி பாராட்டுக்குரியவர்.

அவர் செய்யும் செயல்களுக்காகவும் மற்றும் கூறும் விஷயங்களுக்காகவும் மக்கள் அவரை அவர் அவமதிக்கும் நிலை இருந்தது. ஆனால் ராகுல்காந்தி கடுமையான உழைத்து மிகவும் சுவாரசியமான முறையில் மக்கள் எண்ணத்தை மாற்றியுள்ளார்.இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது. அரசியலில் சேரும் எண்ணம் எனக்கு கிடையாது. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. உண்மையில் நான் அரசியல்வாதியாக இருக்க விரும்பவில்லை” என்றார்.

The post கடுமையாக உழைப்பவர் ராகுல்: பாலிவுட் நடிகர் சைப் அலிகான் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Saip Ali Khan ,Mumbai ,Saeeb Ali Khan ,Mumbai, Maharashtra ,Modi ,Rahul Gandhi ,Aam Aadmi Party ,Arvind… ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!